பாக்டீரியா தண்டு அழுகல் நோய் — மக்காச் சோளம்
Dickeya zeae
அறிகுறிகள்
தண்டின் அடிப்பகுதி கருமை நிறமாக மாறி, நீர் கோர்த்துக் காணப்படும். உட்புறத் திசுக்கள் மென்மையாகி, மிக விரைவாக அழுகத் தொடங்கும். நோய்த்தொற்றுக்கு ஆளான செடிகள் ஆண் பூங்கொத்துகள் வந்த சிறிது காலத்திலேயே கீழே சாய்ந்து இறந்துவிடக்கூடும். இந்த அழுகலின் காரணமாக ஒருவிதமான கடுமையான துர்நாற்றம் வீசும். வெப்பமான மற்றும் அதிக ஈரப்பதமான சூழ்நிலைகளில் இந்நோய் மிக விரைவாகத் தீவிரமடையக்கூடும்.
பரிந்துரைகள்
சிறந்த பலன்களுக்கு காப்பர் ஆக்ஸி குளோரைடுடன் சேர்த்துப் பயன்படுத்தவும். மருந்தை தண்ணீரில் கரைத்து பாதிக்கப்பட்ட செடியின் அடித்தண்டு மற்றும் வேர்ப் பகுதிக்கும், பாதிக்கப்பட்ட பகுதியில் சுற்றியுள்ள செடிகளுக்கும் மருந்தை ஊற்றவும். வயலில் தண்ணீர் தேங்கி நிற்பது நோய் தாக்கத்தை அதிகரிக்கும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது தெளிப்பு (sprinkler) நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும். அது பாக்டீரியாக்கள் வளர்வதற்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.